ஞாயிறு சூரிய வழிபாடு... வெற்றிகளைக் குவிக்க இப்படி வழிபடுங்க...!!

 
சூரியன்

கிரகங்களின் தலைவரான சூரியன் நம்மின் ஆதார சக்தியாக விளங்குகிறார். வேலை, அதிகாரம், ஆட்சி, அரசு சம்பந்தமான காரியங்கள், ஆரோக்கியம் என அனைத்தும் சூரியனைச் சார்ந்தே இருக்கிறது. ஒரு காரியத்தைத் துவங்கும் முன்பு எப்படி விநாயகரைத் துதித்து துவங்கினால் அந்த காரியம் வெற்றி பெறுமோ அதைப் போலவே கிரகங்களின் ஆசி கிடைக்க சூரிய வழிபாடு மிக முக்கியம். 

குறிப்பாக சூரியனுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாட்டை தவற விடாதீங்க. உடல் ஆரோக்கியமும் மேம்படும், உள்ளமும் தெளிவு பெறும். வசீகரமும் கூடும். பேச்சிலும் செயலிலும் உறுதியுடன் கூடிய நிதானம் கைவரப் பெறும்.

சூரிய நமஸ்காரம்

நாம் தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அது நம் மன நிம்மதிக்கு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக அவசியம். அப்படி தினமும் செய்ய  முடியாவிட்டாலும், வாரத்தில் ஒரு நாள், தவறாமல், மறந்து விடாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது அதிகாலை எழுந்து, சூரியோதயத்தைப் பாருங்கள். சூரியனை நமஸ்கரியுங்கள். தம் ஒளியால் உலகினை எழச்செய்யும் சூரியனால் தான் எல்லா உயிரினங்களும் இயங்குகின்றன. அதன் மூலம் சக்தியை பெற்றே தாவரங்களும் வளர்கின்றன. நம் கண்ணுக்கு தெரியும் தெய்வமாக இருப்பது சூரிய பகவான்.

இவரை தொடர்ந்து வழிபாடு செய்திட வாழ்வில் ஏற்றம் காணலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. தினமும் சூரிய ஒளிபடும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து, சூரிய பகவானை வேண்டிக்கொள்ள வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம். 

இன்று சகல செல்வங்களையும் பெற சூரிய வழிபாடு !

சூரியன் நவக்கிரகங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளார். இவரை சிவனோடு இணைத்து சிவ சூரியன் எனவும், விஷ்ணுவோடு இணைத்து சூரிய நாராயணர் எனவும் அழைக்கின்றன புராணங்கள். சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்கிறார். சூரியன் ஒருராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது தான் மாதப்பிறப்பு நிகழ்கிறது.

சூரியன் பச்சை நிறமுடைய ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். சூரியனின் ரதம் பொன் மயமானது என வர்ணிக்கிறது சூர்ய புராணம்.சூரிய பகவான், தன்னுடைய தேரில் நான்கு பட்டணங்களைச் சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குவதாக ஐதிகம்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால், சூரிய பகவானின் அருளைப் பெறலாம். சூரிய பகவானை வணங்குவோம். வாழ்வில் சுபிட்சமும் மன நிம்மதியும் பெற்று வளமோடு வாழ்வோம்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web