புத்தாண்டு நாளில் 16 முறை சூரிய உதயத்தை பார்த்த சுனிதா வில்லியம்ஸ்.. சுவாரஸ்ய பின்னணி!
கிழக்கு நியூசிலாந்து என்பது உலகின் சூரிய உதயம் முதன்முதலில் காணப்படும் பகுதியாகும். இங்குள்ள கிரிமதி தீவு சூரிய உதயத்தை முதலில் பார்க்கிறது. இதையடுத்து தான் மற்ற பகுதிகளுக்கு தெரியும். அந்த வகையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தீவு மக்கள் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடினர். இதைத் தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் புத்தாண்டைக் கொண்டாடின.
அதே சமயம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் புத்தாண்டு சூரிய உதயத்தை சுமார் 16 முறை பார்த்துள்ளார். அதாவது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் சுமார் 16 முறை சூரிய உதயத்தைப் பார்க்க முடியும். சர்வதேச விண்வெளி நிலையம் சுழலும் வேகமே இதற்குக் காரணம். இது மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த வேகத்தில் சுழன்றால் 90 நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க முடியும்.
அதனால்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள எவரும் சூரிய உதயத்தை 16 முறை பார்க்க முடியும். அதைத்தான் சுனிதா வில்லியம்ஸும் பார்த்திருக்கிறார். விஞ்ஞானிகளுக்கு புத்தாண்டு என்பது ஒரு கற்பனை. அதாவது புவி A புள்ளியில் தொடங்கி சூரியனை ஒரு முறை வட்டமிட்டு அதே இடத்திற்குத் திரும்புவது புத்தாண்டு. ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமி மீண்டும் புள்ளி A ஐ அடையாது.
இதற்குக் காரணம் சூரியன் நகர்வதுதான். பால்வெளி அண்டத்தை மணிக்கு சுமார் 8.28 லட்சம் கிமீ வேகத்தில் சுற்றி வருகிறது. அது நகரும்போது, அது நம்மை அதனுடன் இழுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், பூமி A புள்ளிக்கு எவ்வாறு திரும்பும்? இந்தப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் மட்டுமே நம்மை வழிநடத்தப் பயன்படுகின்றன. சூரியன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!