சூப்பர்... ஏப்ரல் 19ம் தேதி காஷ்மீருக்கு முதல் வந்தே பாரத் ரயிலை மோடி தொடங்கி வைக்கிறார்!

இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி ஏப்ரல் 19 ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரயிலை கத்ரா ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கத்ராவில் நடைபெறும் பேரணி ஒன்றிலும் பிரதமர் உரையாற்றுகிறார். ஆரம்பத்தில் கத்ரா மற்றும் ஸ்ரீநகர் பாதையில் ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் மட்டுமே இயக்கப்படும்.
பொதுமக்களின் வரவேற்பைப் பொறுத்து இந்தப் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையர், கத்ரா மற்றும் காஷ்மீர் இடையே ரயில் சேவைக்கு அனுமதி வழங்கினார்.
தற்போது, பள்ளத்தாக்கில் உள்ள சங்கல்டன் மற்றும் பாரமுல்லா இடையேயும், கத்ராவிலிருந்து நாடு முழுவதும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக காஷ்மீர் பாதையில் பகல் நேரத்தில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாலையில் பாதுகாப்புப் பணிகள் திரும்பப் பெறப்படுவதால், பள்ளத்தாக்கில் மாலை நேரங்களில் எந்த ரயில்களும் இயக்கப்படுவதில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!