சூப்பர் நியூஸ்! எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு!

 
சூப்பர் நியூஸ்! எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு!

இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து படிப்படியாக நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில் சேவை மக்களின் தேவையை பொறுத்து இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி மும்பையில் இருந்து வாரணாசிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான நேரத்திற்கு புறப்பட்ட ரயில் கல்யாண் ரயில் நிலையம் சென்றது. அங்கு இருந்து புறப்பட்ட ஆரம்பித்தது.

இந்நிலையில் ரயில் புறப்பட்டதை கவனிக்காத 70 வயதாகும் ஹரி சங்கர் என்ற முதியவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அவர் திடீரென எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் தவறி விழுந்தார். முதியவர் தண்டவாளத்தில் விழுந்ததை கவனித்த ரயில்வே ஊழியர் சந்தோஷ் குமார் ரயில் என்ஜின் டிரைவர்களை நோக்கி சத்தம் போட்டு ரயிலை நிறுத்த சைகை செய்தார்.

சூப்பர் நியூஸ்! எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய முதியவர் பத்திரமாக மீட்பு!

சுதாரித்து கொண்ட என்ஜின் டிரைவர் அவசர பிரேக்கை அழுத்தினார். இதனால் மயிரிழையில் முதியவர் ரயில் சக்கரத்தில் சிக்காமல் உயிர் பிழைத்தார். உடனடியாக தண்டவாளத்திற்கிடையே விழுந்து கிடந்த முதியவரை மீட்டனர். அவர் தண்டவாளத்திற்கும், ரயில் என்ஜினுக்கும் இடையே விழுந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாக்களில் பரபரப்பாக காட்டப்படும் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த திக், திக் காட்சிகளால் கல்யாண் ரயில் நிலையமே சிறிது நேரம் ஆர்ப்பாட்டமாக காணப்பட்டது. ரயில்வே ஊழியரின் சரியான எச்சரிக்கையினாலும், என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தாலும் முதியவர் உயிர் பிழைத்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட மத்திய ரயில்வே, பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் மத்திய ரயில்வே என்ஜின் டிரைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சன்மானம் அறிவித்து உள்ளது.

From around the web