சூப்பர் நியூஸ்! தடுப்பூசி போட்டவர்களுக்கு இனி இது தேவையில்லை! விமான போக்குவரத்து அமைச்சகம்!

சூப்பர் நியூஸ்! தடுப்பூசி போட்டவர்களுக்கு இனி இது தேவையில்லை! விமான போக்குவரத்து அமைச்சகம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் இருந்து இந்தியாவிற்குள் விமானங்களில் பயணிப்பவா்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.

சூப்பர் நியூஸ்! தடுப்பூசி போட்டவர்களுக்கு இனி இது தேவையில்லை! விமான போக்குவரத்து அமைச்சகம்!

தற்போது இந்த கட்டுப்பாட்டில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனாவிற்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன் சென்னையில் இருந்து கேரளா, மராட்டிய மாநிலங்களுக்கு விமானத்தில் பயணிக்கலாம்.

ஆனால் 2 டோஸ் தடுப்பூசி போடாதவா்கள், விமான பயணம் செய்யும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

From around the web