சூப்பர் ஆபர்! இனி டெபிட் கார்டிலேயே EMI வசதி!

 
சூப்பர் ஆபர்! இனி டெபிட் கார்டிலேயே EMI வசதி!

வாடிக்கையாளர்களின் தேவைகளை பொறுத்து அதன் சேவைகளை மேம்படுத்தி வருகிறது ஸ்டேட் பேங்க். அந்த வகையில் தற்போது ஸ்டேட் பாங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI பெறும் வசதியை வழங்கியுள்ளது. அதன்படி எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8,000 ரூபாய் முதல் ரூ.1,00,000 வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.

சூப்பர் ஆபர்! இனி டெபிட் கார்டிலேயே EMI வசதி!

வழக்கமாக கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த EMI வசதி இருந்து வந்தது. ஆனால், தற்போது ஸ்டேட் பேங்க் தங்களது வாடிக்கையாளர்களுக்காக டெபிட் கார்டின் மூலமாகவே EMI வசதியை அறிவித்துள்ளது.
எஸ்பிஐ டெபிட் கார்டுகள் மூலம் நேரடியாக கடைகளில் சென்று பொருட்களை வாங்கும்போதும், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக ஆன்லைனில் வாங்கும்போதும் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

சூப்பர் ஆபர்! இனி டெபிட் கார்டிலேயே EMI வசதி!


கடன் தொகைக்கு ஏற்ப எஸ்பிஐ வங்கி 2 வருட MCLR விகிதத்துடன் 7.5 சதவீதம் வட்டியை வசூலிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் அல்லது 18 மாதம் EMI சேவைகளைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு மூலம் EMI வசதி பெற டெபிட் கார்டின் கடைசி 4 எண்களை 567676 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

சூப்பர் ஆபர்! இனி டெபிட் கார்டிலேயே EMI வசதி!

உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு கடன் பெறத் தகுதியான தொகை, அது செல்லுபடியாகும் வணிக வளாகங்கள் என அனைத்து தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து அனுப்பி வைக்கப்படும். டெபிட் கார்டு மூலம் EMI செலுத்தும் திட்டம் முற்றிலும் இலவசம் எனவும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

From around the web