பாட்ஷா ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து!
![ரஜினி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/d56f681e09b0dbf751ac0cafa50a2258.png)
இன்று ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உட்பட பல நாடுகளில் புத்தாண்டு பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாட்டு வருகிறது.
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.
— Rajinikanth (@rajinikanth) January 1, 2025
கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025
நாடு முழுவதும் மக்கள் உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்கின்றனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்ஷா பட வசனத்தை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான்” என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!