மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற தடை... சென்னை உட்பட 6 நகரங்களுக்கு உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு!!

மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது குறித்த பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனித கழிவுகளை மனிதர்களை அகற்றுவது எப்படி? எப்போது? நிறுத்தப்பட்டது என்ற விவரங்களை பிப்ரவரி 13ம் தேதிக்குள் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்.
இதனை நாடு முழுவதும் உள்ள நகராட்சி மாநகராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 மாநகரங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளவும், மனிதர்களைக் கொண்டு சாக்கடைகளை அள்ளவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!