தெரு நாய்கள் வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

 
நாய்

நாட்டின் பல பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை குறித்து எழுந்துள்ள விவகாரம் தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மீண்டும் அதே இடத்திலேயே விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெருநாய்

அதேபோல், இந்த நடவடிக்கை தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணக்க அறிக்கை (affidavit) தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தன.

ஆனால் பல மாநிலங்கள் இதுவரை அதனை தாக்கல் செய்யாத நிலையில், கடந்த அக்டோபர் 27ம் தேதி நடைபெற்ற விசாரணையில், அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் மறுத்தது.

தெருநாய்

இதனால், இந்த வழக்கு இன்று நவம்பர் 3ம் தேதி நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் அஞ்சாரியா அடங்கிய அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு உட்பட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?