பிண்ணனி பாடகி சுசீலா , மு. மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது... தமிழக அரசு அறிவிப்பு!

 
சுசீலா


 
தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பிண்ணனி பாடகி பி.சுசீலாவுக்கும், கவிஞர் மேத்தாவுக்கும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிண்ணனி பாடகி பி.சுசீலா  5000க்கும்  அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.இந்த விருதுடன் சேர்த்து ரூ.10 லட்சம் ரொக்கமும் மற்றும் நினைவுப் பரிசும் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

திரைப்படமாகும் பின்னணி பாடகி சுசீலா வாழ்க்கை!


இது குறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3ம் நாளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  2022ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மு.மேத்தா
இதனை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர், திரைப்பட இயக்குநர் திரு.கரு.பழனியப்பன்  இவர்களை  உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.2022  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள  திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது.
முதுமை காரணமாக ஓய்விலிருக்கும் திரு.ஆரூர்தாஸ்  இல்லத்திற்கே முதல்வர் நேரில் சென்று  இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள்”, என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web