மகள் மீது ஏற்பட்ட சந்தேகம்.. ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அஷ்ரஃப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு 19 வயதில் அன்ஷு என்ற மகள் இருந்தாள். தனது மகளுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக ராஜ்பால் சந்தேகித்தார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த நாளில், ராஜ்பால் தனது மகளை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, ராஜ்பால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராஜ்பால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அன்ஷுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!