சூனியம் வைத்ததாக சந்தேகம்.. மூதாட்டியை சிறுநீர் குடிக்க வைத்து டார்ச்சர் செய்த கிராம மக்கள்!

 
மகாராஷ்டிரா மூதாட்டி

மகாராஷ்டிராவில் சூனியம் செய்வதாக சந்தேகித்து ஒரு மூதாட்டியை அவரது கிராம மக்கள் சித்திரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள ரெத்யகேடா கிராமத்தைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி டிசம்பர் 30 ஆம் தேதி தனது அண்டை வீட்டாரால் இந்த சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.

சூனியம்

வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த அவரது மகனும் மருமகளும் ஜனவரி 5 ஆம் தேதி திரும்பி வந்து மூதாட்டியின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் பிடித்து, குச்சிகளால் அடித்து, அறைந்தனர். சூடான இரும்பு கம்பிகளால் அவரது கைகள் மற்றும் கால்களில் முத்திரை குத்தினர்.

போலீஸ்

சிறுநீர் குடிக்கவும், நாய் மலம் சாப்பிடவும் கட்டாயப்படுத்தினர். கழுத்தில் செருப்பு கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மூதாட்டியின் மகனும் மருமகளும் தற்போது அமராவதி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர். உள்ளூர் போலீசார் புகாரை மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web