சாமியே... சரணம் ஐயப்பா | கார்த்திகை துவங்கிடுச்சு... மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

 
சபரிமலை

கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் விநாயகர், முருகர் என தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கோயில்களில் சென்று பக்தர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.  திருச்செந்தூரில் பக்தர்கள் அதிகளவில் குவிந்து ஐயப்பனுக்கு விரதம் இருக்க மாலை அணிந்துக் கொண்டனர்.

சபரிமலை
48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது ஐயப்ப பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  அதன்படி, கார்த்திகை மாதம் 1ம் தேதியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நேற்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தைத் தொடங்கினர்.

சபரிமலை

தமிழகம் முழுவதும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு, மாலை அணிந்து கொண்டனர். டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் மண்டல பூஜை, அடுத்த வருடம் ஜனவரி 14ம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளது.  அதன்படி டிசம்பர் 26 இரவு 11 மணிக்கு நடை மூடப்பட்டு  பின்னர், மகர விளக்கிற்காக மீண்டும் டிசம்பர் 30 அன்று மாலை நடை திறக்கப்பட உள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web