’ஸ்வர்ண பிரசாதம்’.. ஒரு கிலோ ஸ்வீட் ₹1.11 லட்சம்... நெட்டிசன்களின் பரபரப்பான ரியாக்ஷன்!

 
ஸ்வீட்

தீபாவளியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் உள்ள பிரபல இனிப்பு கடை ஒன்று, இந்தியாவில் இதுவரை விற்கப்பட்டதிலேயே மிக விலையுயர்ந்த இனிப்பை அறிமுகம் செய்துள்ளது. “ஸ்வர்ண ப்ரசாதம்” எனப்படும் இந்த இனிப்பு ஒரு கிலோ ரூ.1,11,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்வீட்டில் 24 காரட் தங்கப் பொடி (edible gold) சேர்க்கப்பட்டிருப்பதுடன், இது “அல்ட்ரா பிரீமியம்” தரத்தில் தயாரிக்கப்பட்டதாக கடை உரிமையாளர் அஞ்சலி ஜெயின் தெரிவித்துள்ளார். “சில்கோசா” எனப்படும் அரிய வகை விலை உயர்ந்த பருப்பினால் இது தயாரிக்கப்பட்டதாகவும், நகைக்கூடு போன்று ஆடம்பரமாகப் பொதியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதனைப் பார்த்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஒருவர், “இதற்குப் பதிலாக 10 கிராம் தங்கம் வாங்கிவிடலாம். இந்த இனிப்பு சாப்பிட்டால் உடல் எடையும் அதிகரிக்கும், சில மணி நேரத்தில் குப்பையிலேயே போகும்!” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். 

மற்றொருவர், “*இதற்காகத்தான் தங்கம் விலை வானை எட்டுகிறது” என எழுதியுள்ளார். இன்னொருவர், “இதை சாப்பிட வேண்டுமா? இல்லையென்றால் லாக்கரில் வைக்க வேண்டுமா?” என நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

ஸ்வீட்

இந்த ஸ்வீட்டின் தயாரிப்பு குறித்து கடை உரிமையாளர் தெரிவிக்கையில், ““இந்த இனிப்பின் தயாரிப்பில் ஜெயின் ஆலயத்திலிருந்து வாங்கப்பட்ட தங்கப் படலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விலங்குகள் சார்ந்த பொருட்கள் இல்லாத, ஆன்மிக ரீதியாக தூய்மையானது. குங்குமப்பூ பூசப்பட்டு, மேலே பைன் நட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சேர்க்கப்பட்ட ‘ஸ்வர்ண பஸ்மா’ (தங்கச் சாம்பல்) ஆயுர்வேத அடிப்படையிலானது. பாரம்பரியம், பண்பாடு, செழிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம்” என்றார். இந்த விலை உயர்ந்த “தங்க இனிப்பு” தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விவாதங்களைத் தூண்டியிருக்கிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?