நடுரோட்டில் ஆடைகளை கழற்றி அட்ராசிட்டி.. போக்குவரத்து காவலரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்!

 
சண்முகராஜா

சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்தராஜ் (36). இவர் இன்று ஸ்பென்சர் பிளாசா அருகே பணியில் இருந்தார். அப்போது, ​​இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மாநகரப் பேருந்தை வழிவிடாமல் மறித்தார். போலீஸ்காரர் வழிவிடச் சொன்னார். ஆனால், பதிலுக்கு அந்த நபர், போலீஸ்காரர் ஆனந்தராஜை கீழே தள்ளிவிட்டு தாக்கினார்.


இதையடுத்து சக போலீசார் அந்த நபரை பிடித்து அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மயிலாப்பூரை சேர்ந்த சண்முகராஜா (45) என்பது தெரியவந்தது. மேலும் சண்முகராஜா மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சண்முகராஜை போலீசார் பிடித்ததும், அவர் உடைகளை கழற்றி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலையில் படுத்து பிரச்னையை ஏற்படுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web