முதல்வர் ஸ்டாலின் 9ம் தேதி திருச்சி பயணம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வருகிற 9-ம் தேதி திருச்சிக்கு வருகிறார். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அன்றே இரவு சாலை மார்க்கமாக காரில் திருச்சிக்கு வர உள்ளார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

அடுத்த நாள் 10ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. எம். பழனியாண்டி குடும்ப திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இந்த விழா சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.

ஸ்டாலின்

அதன்பின், கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பாவை அறக்கட்டளை நிர்வகிக்கும் அன்புச்சோலை முதியோர் இல்லத்தை முதல்வர் தொடங்கி வைப்பார். பிறகு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் புறப்பட்டு செல்லும் அவர், களமாவூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் ரூ.201 கோடியே 70 லட்சம் மதிப்பில் 103 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.223 கோடியே 6 லட்சம் மதிப்பில் நிறைவுற்ற 577 திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும் 44,093 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.773 கோடியே 19 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். விழாவை முன்னிட்டு நிகழ்ச்சி திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க