சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி: முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
12 நாடுகள் பங்கேற்கும் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளன. இந்தப் போட்டிகளுக்கான கோப்பையைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்து, தொடக்க விழாவில் போட்டியையும் தொடங்கி வைத்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் நேரு பூங்காவில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கி வரும் டிசம்பர் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
நடப்புச் சாம்பியன் எகிப்து, இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங், சீனா, தென் ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய 12 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
இந்திய அணியில் டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுபவ வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, அத்துடன் அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடக்கம் குறித்துப் பேசிய ஜோஸ்னா சின்னப்பா கூறுகையில், போட்டிகள் சென்னையில் உற்சாகம் தரும் வகையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் போட்டி கடினமானதாக இருக்கும் என்றும், அதற்குத் தங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தத் தொடக்க விழாவில் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனத்தின் தலைவர் அனில் வாதவா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
