தமிழகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கு முதல்வர் விருது வழங்கினார்... டாப் 3 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் இவை தான்!

 
சிறந்த காவல் நிலையம் முதல்வர் பரிசு மதுரை

இந்தியா முழுவதும் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

பதக்கம்

தமிழக ஆளுநர் ரவி கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். அதில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் விருதினை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான க.வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. 

கோட்டை அமீர் மத நல்லிணக்கம் விருதினை ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்ஏ அமீர் அமிஷாவுக்கும்,  அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேலுக்கும் வழங்கப்பட்டது.

குடியரசு

இதனையடுத்து சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை மதுரை மாநகரம் பெற்றுள்ளது. சிறந்த காவல் நிலையத்திற்கான 2ம் பரிசை திருப்பூர் மாநகரமும்,  3ம் பரிசை திருவள்ளூர் மாவட்டமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web