தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மருந்தகம் அமைக்க, பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.in.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது பொதுமக்கள் நலன் கருதி, கால அவகாசம் டிசம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை மருந்தகம் அமைக்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!