தமிழக அரசு அதிரடி! செப்.30 முதல் இவைகளுக்குத் தடை!

 
தமிழக அரசு அதிரடி! செப்.30 முதல் இவைகளுக்குத் தடை!

உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கேற்ப மனித உபயோகத்தின் எச்சங்களாக குப்பைகளும், கழிவுகளும் கூட அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் பெரும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக இயற்கை சூழலை அழிப்பதில் பெரும் பங்கு வகிப்பது பிளாஸ்டிக். ஆனால் மக்களால் பிளாஸ்டிக்கை விட்டு வாழ முடியவில்லை. அந்த அளவுக்கு மக்களின் வாழ்வில் ஒன்றி போய்விட்டன பிளாஸ்டிக் பைகள்.

தமிழக அரசு அதிரடி! செப்.30 முதல் இவைகளுக்குத் தடை!


ஆனால் நம் கண்ணுக்கு தெரியாமல் இந்த பிளாஸ்டிக் பைகள் ஏராளமான தீங்குகளை விளைவிக்கின்றன. வன உயிரினங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என மனித இனம் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பிளாஸ்டிக்கால் அழிவை சந்தித்து வருகின்றன.

தமிழக அரசு அதிரடி! செப்.30 முதல் இவைகளுக்குத் தடை!

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக்கை 2018ம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக அறிவித்தது.

தமிழக அரசு அதிரடி! செப்.30 முதல் இவைகளுக்குத் தடை!

ஆனால் அந்த அறிவிப்பு தமிழகத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. பெரும்பாலான இடங்களில் வெளிப்படையாகவே பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசு 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு செப்டம்பர் 30 முதல் தடை விதித்துள்ளது. 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் 2023-ம் ஆண்டு முதல் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

From around the web