தமிழக அரசு அறிவிப்பு... வீர தீரச் செயல்களுக்கு ரூ.1,00,000 ரொக்கத்துடன் விருது... விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் வீர தீரச் செயல்களுக்கான விருதுகள் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா பெயரில், அண்ணா பதக்கம் என்று ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வரப்படுகிறது. 

தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் வீர தீரச் செயல்களைப் புரிந்தவர்கள் இந்த பதக்கத்தைப் பெற தகுதியானவர்கள். அவர்களுக்கு அண்ணா பதக்க விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. 

அண்ணா

இந்நிலையில் இந்தாண்டுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வீர தீரச் செயல்களுக்கான -அண்ணா பதக்கம்- ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது எனவும் வீரரைச் செயல்கள் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியானர்கள். பொதுமக்களில் முவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை எனவும் இங்கிருது ரூ.100,000 க்கான (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும் எனவும், இப்பதக்கம் முதலமைச்சர் அவர்களால் 28.01.2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும், 2025ஆம் ஆண்டிற்கான வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் – விருதுக்கு விதிகளின்படி தகுதியுடைய அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் பரிந்துரை செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

தமிழக அரசு

https.//awards.tn.gov.in என்ற அக்கடித்தில், விருதுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் மட்டுமே பெறப்படும் எனவும், அவ்விருதுக்காக பரித்துரைக்கப்படும் நபர்களின் வீரதீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) படிவத்தில் தெளிவாகவும் தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்‌” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web