பெண்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!

 
மகளிர் உரிமைத் தொகை

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகத் தமிழ்நாடு அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவிகள் மற்றும் சுய வேலைவாய்ப்புத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களைக் குறிவைத்து அரசு செயல்படுத்தும் இரண்டு முக்கியத் திட்டங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

மகளிர் உரிமை தொகை

1. சுய வேலைவாய்ப்புத் திட்டம் (தனிநபர் - SEP-I):

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை, எளிய தனிநபர்கள் தொழில் தொடங்கவும், சாலையோர வியாபாரிகள் தங்கள் தொழிலை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகளில் இருந்து ஒரு நபருக்குக் குறைந்தது ரூ. 50,000 முதல் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. வங்கிகள் 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கும் பட்சத்தில், 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டித் தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

தடுமாறும் திமுக... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா? ஆட்சிக்கு வந்ததில் இருந்து 33.5% அதிகரித்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

2. சுய வேலைவாய்ப்புத் திட்டம் (குழு - SEP-G):

ஆர்வமுள்ள ஏழை, எளிய மக்கள் குழுக்களாகத் தொழில் தொடங்க இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. வங்கிகளில் இருந்து ஒரு குழுவிற்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடன் தொகை பெற்றுத்தரப்படுகிறது. இந்தக் கடன் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. 20 லட்சம் வரை பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கப்படும் இனங்களில், 7 சதவீதத்திற்கு மேலாக உள்ள வட்டித் தொகைக்கு வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!