தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

 
தீபாவளி

அக்டோபர் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என ஒரு நாளில் இரண்டு மணிநேரத்திற்குள் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 2018 முதல் தீபாவளி பண்டிகை நாளில் இந்த நேர வரம்பு நடைமுறையில் இருப்பதாகவும், இந்த ஆண்டும் அதேபடி அமல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசுகளை திறந்த வெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க குறைந்த ஒலியுடன் கூடிய பசுமை பட்டாசுகளை (Green Crackers) பயன்படுத்துமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பட்டாசு விபத்து

இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தீபாவளி நாளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?