பெண்களுக்கு தமிழகம் பாதுகாப்பான மாநிலம்... ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக விளங்குகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும் போது பாதுகாப்பாக உணர்கின்றனர். பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர், தமிழ்நாட்டை பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.
இதன் காரணமாக தமிழ்நாட்டுக்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இது போன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. தேர்தல் அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் சாதிய சண்டைகள் நடப்பது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!