தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற,  உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற,  உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

இதுதொடர்பில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வருகிற 9-ந் தேதி வெளியிடப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டிசம்பர் 9ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியீடு!! நகர்ப்புற,  உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தம்!

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குவது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்ப்பது, மண்டல அலுவலர்களையும் வாக்குப்பதிவு அலுவலர்களையும் நியமனம் செய்வது, வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களின் இருப்பை உறுதி செய்வது, வாக்கு எண்ணும் மையங்களை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரலையாக கண்காணிக்கும் வகையில் நுண் மேற்பார்வையாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட சில முக்கிய பணிகள் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web