தான்சானியாவில் சர்ச்சைக்குரிய தேர்தல்: அதிபர் சமய்யா சுலுஹு ஹஸன் பெருவெற்றி!

 
தான்சானியா

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் சமய்யா சுலுஹு ஹஸன் 97 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு உயர்ந்த வாக்கு வித்தியாசம் சாத்தியமில்லாதது என்றும், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

2021 ஆம் ஆண்டில் அதிபர் ஜான் போம்பே மகுஃபுலி மரணமடைந்ததைத் தொடர்ந்து, அப்போது துணை அதிபராக இருந்த சமய்யா அதிபர் பொறுப்பேற்றார். அண்மையில் நடைபெற்ற இந்தத் தேர்தலை முன்னிட்டு, முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகளுக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 பேர் மட்டுமே போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் தான்சானியாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. ஆனால் இணைய சேவை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள நிலைமைகள் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!