மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி... பிப்ரவரியில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை..!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!


 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு  பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குபதிவு நடைபெறும் நாளான 5ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 8ம் தேதி ஆகிய நாட்களில்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

டாஸ்மாக்

அதன்படி பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, எப்எல்ஏ மற்றும் எப்எல்7 ஆகிய உரிமத்தலங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள்  மூடப்பட்டிருக்கும்.

ஈரோடு


இந்த நாட்களில்  மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web