தமிழகம் முழுவதும் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... அரசு உத்தரவு!
தமிழகம் முழுவதும் இம்மாதம் 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டியும் இரு தினங்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், பார்கள் ஆகியவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு, ஜன.15 திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26 குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரும் நேற்று மாலை முதலே பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் நோக்கி பயணப்பட துவங்கியுள்ள நிலையில், இந்த வருடம் பொங்கல் விடுமுறை நாட்களுக்கும் ஏறக்குறைய பல மாவட்டங்களிலும் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வருவதால், இந்த வருடம் பொங்கல் டாஸ்மாக் விற்பனை கணிசமாக அதிகரிக்க டார்கெட் நிர்ணயித்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!