இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை 3 நாட்களுக்கு மூட உத்தரவு!

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ள வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு  மீனா உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சவேரியார் ஆலய வருடாந்திர விழாவை ஒட்டி அதன் வட்டாரத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், சொகுசு ஹோட்டல் பார்கள் அனைத்தையும் இன்று டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக்

இந்த தடை உத்தரவின்  மூலமாக நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இன்று முதல் டிசம்பர் 3ம் தேதி வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web