இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை... கோடிகளைக் குவித்த பொங்கல் வியாபாரம்!

தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 15ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாலை முதலே ‘குடி’மகன்கள் பலரும் கையில் பொறுப்புடன் துணி பைகளைக் கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கினார்கள். நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட அதிகளவில் கூட்டம் அலைமோதியது.
பொதுவாகவே பண்டிகை காலங்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் விற்பனை கோடிகளை தொட்டு சாதனை படைக்கும். இந்நிலையில் இந்த பொங்கல் விடுமுறைக்கு நேற்றைய பொங்கல் விற்பனையை சேர்க்காமலேயே இரண்டே நாட்களில் கடந்த வருடத்தை விட டாஸ்மாக் விற்பனை கோடிகளைக் குவித்துள்ளது.
பலரும் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி மாலை முதலே சொந்த ஊர் நோக்கி பயண பட துவங்கியதில், கடந்த ஜனவரி 11ம் தேதி துவங்கி சனி, ஞாயிறுகளிலேயே சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகளவில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைக்கட்ட துவங்கியிருந்தது.
இந்த வருடம் பொங்கலுக்கு ஜனவரி 11ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் தொடர் விடுமுறை என்பதால், டாஸ்மாக் விற்பனையில் இந்த பொங்கல் விடுமுறை நாட்களின் வசூல் கோடிகளைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வருவதால், ‘குடி’மகன்கள் முந்தைய தினமே முண்டியடித்து வாங்கி ஸ்டாக் வைத்து கொள்கின்றனர். அரசு டாஸ்மாக் கடைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக அது குறித்து கண்டுக்கொள்ளாமல் இருப்பது குறித்தும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பல இடங்களில் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!