ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த டாடா ஏஸ் வாகனம்.. சாலை தடுப்பில் மோதி கோர விபத்து.. ஒரு பெண் பலி!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் விபத்துக்குள்ளானது. திட்டக்குடி அருகே டாடா ஏஸ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் இருந்த மரிக்கொழுந்து (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் வாகனத்தில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை தனது உறவினர்களுடன் குலதெய்வ கோயிலுக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!