வகுப்பறையில் அமர்ந்து ஆபாச படம் பார்த்த ஆசிரியர்.. நேரில் பார்த்த மாணவனை தாக்கிய கொடூரம்!

 
 ஆசிரியர்

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் குல்தீப் யாதவ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர் ஆபாசப் படம் பார்த்துள்ளார். அதை அங்கிருந்த எட்டு வயது மாணவன் பார்த்தான். இதையடுத்து அந்த மாணவன் தனது நண்பர்களிடம் இதுகுறித்து கூறி சிரித்தார்.

மாணவர்கள் தன்னை பார்த்து சிரிப்பதை ஆசிரியர் கவனித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், எட்டு வயது சிறுவனின் தலைமுடியை பிடித்து சுவரில் பலமாக தாக்கினார். பலத்த காயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அறிந்த மாணவனின் தந்தை ஜெய்பிரகாஷ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ்

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து பேசுகையில், "இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை சட்டப்படி விசாரித்து தண்டிக்கப்படும்" என உறுதி அளித்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web