பள்ளி நேரத்தில் மாணவர்களை சிமெண்ட், காய்கறி வாங்க அனுப்பிய ஆசிரியர்கள்... பகீர்!

 
பீகார்
 

கல்விச் சீர்திருத்தம் பேசப்படும் சூழலில், பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வியில் நடந்த அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோராடிஹ் வட்டாரத்தில் உள்ள ஷேர்கர் நடுநிலைப் பள்ளியில், வகுப்புகளுக்கு பதிலாக மாணவர்களை சிமெண்ட் மற்றும் காய்கறிகள் வாங்க அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது. இது மாணவர்களின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் அளித்த தகவலின்படி, காயத்ரி ஆசிரியை ஒவ்வொரு மாணவரிடமும் 500 ரூபாய் கொடுத்து, 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முர்ஹானிலிருந்து சிமெண்ட் வாங்க இருசக்கர வண்டியில் அனுப்பியுள்ளார். வழியில் பாலம் அருகே மினி லாரியுடன் மோதாமல் மாணவர்கள் நூலிழையில் தப்பியுள்ளனர். சிறு தவறு நடந்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

சிமெண்ட் மட்டுமின்றி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் மாணவர்களை வைத்து வாங்கச் சொன்னதாக கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகளை வெளியே அனுப்பக் கூடாது என ஏற்கனவே உத்தரவு இருந்தும், அது மீறப்பட்டுள்ளதாக கல்வி அலுவலர் தினேஷ் குமார் தாஸ் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மையிலேயே கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா, இல்லை வழக்கம்போல் மறைக்கப்படுமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!