அடுத்தடுத்து அதிர்ச்சி... டெங்கு காய்ச்சலுக்கு 18 வயது இளம்பெண் பலி!

 
டெங்கு


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு ஜே ஜே நகரில் வசித்து வரும்   கூலித் தொழிலாளி கங்கா, இவரது மகள் பிரியா. இவருக்கு 19 வயது. இவர்  நா்சிங் படித்து விட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தாா்.  கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கங்காவுக்கு மிகக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

இதனையடுத்து அவர்  வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.  உயிரிழந்த பிரியா நா்சிங் பெண் வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர்.  

ஆம்புலன்ஸ்

இப்பகுதியில்  கடந்த வாரம் வாலாஜாவில் கடப்பா ரங்கன் தெருவை சோ்ந்த 13 வயது மாணவன் ஹரி  டெங்கு காய்ச்சலால் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
வாலாஜாபேட்டையில் காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோா் தினம்தோறும் மருத்துவமனைக்கு சென்று வரும் நிலையில், சிகிச்சைக்காக 10-க்கும் மேற்பட்டோா் சோ்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web