ரயில் முன் தள்ளி இளம்பெண் கொடூர கொலை.. சத்யபிரியா வழக்கில் நாளை தீர்ப்பு!
சென்னை பரங்கிமலை காவல் நிலைய குடியிருப்பில் வசித்து வந்தவர் சத்யபிரியா. கல்லூரி மாணவியான இவர், கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞரால் நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் வந்துக்கொண்டிருந்த ரயிலில் தள்ளப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் மாணவி சத்யபிரியா தன்னிடம் பேசாமல் விட்டதால் சதீஷ் ரயில் முன் தள்ளி கொன்றது தெரியவந்தது.
வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கில் 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். அதே சமயம் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மகளிர் சிறப்பு நீதிமன்றம் வரும் நாளை 27ம் தேதி (27.12.2024) தீர்ப்பு வழங்க உள்ளது.
சத்யப்ரியாவும், காதலித்து வந்த நிலையில், சத்யாவின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சதீஷிடம் பேசுவதை சத்யப்பிரியா நிறுத்திவிட்டதாக அப்போது கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சத்யப்பிரியாவை ரயில் முன் தள்ளி கொன்றார். இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு இந்த வழக்கு சிபிஐ சிஐடிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!