சொகுசு காரில் இளம்பெண் கொடூர கொலை... தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றசெயல்கள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சொகுசு காரில் வைத்து ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைலமர காட்டுப் பகுதியில் வாகனத்துக்குள் இரத்தக் களர்ந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த மகேஸ்வரி (35) என்பவர்தான் கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்கிற பாண்டி குமாரின் மனைவியான மகேஸ்வரி, இன்று காலை தனது காரில் வீட்டில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது ஆவுட்பொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி அருகே காட்டுப்பகுதியில் வாகனத்துக்குள் அவரது உடல் ரத்த கசிவுடன் கிடந்தது.

சம்பவ தகவல் அறிந்ததும் குன்றக்குடி போலீசார் அங்கு சென்று உடலை மருத்துவ பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்ததுடன், மோப்பநாய் முகுளியையும் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாய் சில தூரம் சென்றபோதிலும் யாரையும் பிடிக்க முடியாமல் திரும்பியது.

மகேஸ்வரியின் மரணத்தைச் சுற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்பட்ட விரோதம் அல்லது குடும்பத் தகராறு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காட்டுப் பகுதியில் காரில் பெண் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
