ஓடும் ரயிலில் இளம்பெண் தீ வைத்து எரித்து கொலை... துடிதுடித்து சாகும் வரை பார்த்து ரசித்த இளைஞர்!
அமெரிக்காவில் ரயிலில் இளம்பெண் ஒருவரைத் தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் ஒருவர், இளம்பெண் தீயில் துடிதுடித்து சாவதை நின்று ரசித்துக் கொண்டிருந்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலைச் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புரூக்ளின் நகா் நோக்கி ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த ரயிலில் ஒரு இளம்பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர் அவரது ஆடையில் தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அவர் சாகும்வரை அந்த வாலிபர் நின்று ரசித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் இறங்கிய அவா் சாதாரணமாக நடந்து சென்றார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில் இந்த கொலையை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் குவாத்தமாலாவைச் சேர்ந்த சபேட்டா என்பதும், இதற்கு முன்னர் நாடு கடத்தப்பட்டவர் என்றும், அமெரிக்காவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நியூயார்க் நகர காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!