குளிக்கும் போது இளம்பெண்ணை வீடியோ எடுத்த விவகாரம்.. பாஜக நிர்வாகி அதிரடியாக கைது!

 
குமார்

தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள தட்சின்மேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (50). ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,  நேற்று புளியரை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

புளியரை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்ததை பாஜக நிர்வாகி குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அந்தப் பெண் பயந்து உதவி கேட்டு அலறினார். இதனால், அவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அந்தப் பெண் புளியரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி புளியரை பகுதியில் பதுங்கியிருந்த குமாரை கைது செய்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web