பழகுவதை நிறுத்தியதால் இளம்பெண் படுகொலை... கள்ளக்காதலன் வெறிச்செயல்... திண்டுக்கல்லில் பரபரப்பு!
திடீரென தன்னுடன் பழகுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளியான மாரிமுத்து(45) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீப காலமாக மாரிமுத்துவை விட்டுவிட்டு வேறு ஒரு நபருடன் பஷிராபேகம் பழக்கம் வைத்துக் கொண்டு மாரிமுத்துவை கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாரிமுத்து, நேற்று காலை வழக்கம்போல கடையில் இருந்த பஷிரா பேகத்திடம் சென்று தகராறு செய்துள்ளார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் பஷீராபேகத்தை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மாரிமுத்துவுக்கும் கழுத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாரிமுத்துவை பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பஷிராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சன்னதி வீதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!