பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

 
ஞானதுரை

திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த 27 வயது திருமணமான பெண் தனியார் மொபைல் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் வாடகை வீட்டின் உரிமையாளரான பேபி லட்சுமியின் சகோதரர்  சீவலப்பேரியை சேர்ந்தவர் ஞானதுரை (30). இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். அவ்வப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் பெண்ணை நேரில் அழைத்து பேசி தொல்லை கொடுத்து வந்தார்.

பாலியல்

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி களக்காடு அருகே பெண்ணைக் கடத்திச் சென்று நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து ஆசிட் வீசி பாலியல் வன்கொடுமை செய்தார். பலத்த காயம் அடைந்த பெண் ஆறு மாத சிகிச்சைக்கு பின் இறந்தார். இதையடுத்து களக்காடு போலீசார் ஞானதுரையை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், ஞானதுரைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web