தனது வீட்டில் வாடகை இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அதிமுக நிர்வாகி அதிரடியாக கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே படப்பை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் (60). இவர் குன்றத்தூர் ஒன்றிய எம்ஜிஆர் அணியின் இணைச் செயலாளர். இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் ஃபாக்ஸ்கானில் பணிபுரியும் 24 வயதுடைய இரண்டு இளம் பெண்கள் அவரது வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளனர். இதனிடையே, கடந்த 20 நாட்களாக, பொன்னம்பலம் ஒரு இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.
இதனால் பயந்துபோன இரண்டு பெண்களும், அவரது வாடகை வீட்டை விட்டு வெளியேறி, கீழ் படப்பை பகுதியில் உள்ள மற்றொரு வாடகை வீட்டில் குடியேறினர். இதற்கிடையில், பொன்னம்பலம் அந்த இளம் பெண்ணை தனது செல்போனில் தொடர்பு கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இரண்டு பெண்களும், அவரது சக ஊழியர்களும் பொன்னம்பலத்தை கட்டையால் தாக்கி மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் பொன்னம்பலத்தை கைது செய்து, பெண்கள் மீதான வன்கொடுமை சட்டம், பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், பெண்களைத் தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர். இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொன்னம்பலத்தை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!