இரயிலில் நூதன முறையில் கஞ்சா கடத்திய இளம்பெண்... 8 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
இளம்பெண் காதல் தோல்வி தனிமை

கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே வீசப்பட்ட கஞ்சா பண்டல்களைப் பெற்றுச் சென்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

திருச்சூர் இரயில் நிலையத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற ஒரு எக்ஸ்பிரஸ் இரயில் அங்கமாலி அருகே நெடுவன்னூர் பகுதியில் சென்றபோது, இரயிலில் பயணித்த ஒருவர் 4 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். இதைப் பார்த்த சிலர், இரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

நெடும்பாசேரி போலீசார் அங்கு விரைந்து சென்றபோது, இரயிலில் இருந்து வீசப்பட்ட அந்தப் பண்டல்களை ஓர் இளம்பெண் எடுத்துச் சென்றார். அவரைப் பிடித்துச் சோதனை செய்தபோது, அந்தப் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா

கடத்தல் பின்னணி:விசாரணையில், பிடிபட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி (24) என்பதும், இரயில் நிலையங்களில் போலீசார் மற்றும் கலால் துறையினர் சோதனை மேற்கொள்வதால், கஞ்சா கடத்தல்காரர்கள் நூதன முறையில் இரயிலில் இருந்து வெளியே வீசி இளம்பெண்களைக் கொண்டு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து ஷாலினியை போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!