ஆணுறுப்பை சிதைத்து இளைஞர் கொடூரக் கொலை.. உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் வெறிச்செயல்!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் வசித்து வருபவர் முசம்மில், இவர் ஒரு மொபைல் கவர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இந்நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய முசம்மில், மாலையில் கூட வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடினர். அவரது செல்போன் மூலம் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
முசம்மிலின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பட்காபூர் பகுதியில் உள்ள ஒரு கால்வாய் அருகே ஒரு இளைஞர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபோது, அந்த இளைஞர் காணாமல் போன முசம்மில் என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் அவரது தொண்டையை அறுத்து, அவரது ஆண்குறியை சிதைத்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அர்ஹான் மற்றும் அவரது நண்பர் குட்டு ஆகியோரை போலீசார் கைது செய்தபோது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அர்ஹானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முசம்மிலுக்கு தகாத உறவு இருந்தது. இதனால் முசம்மிலுக்கும் அர்ஹானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அர்ஹான், தனது நண்பருடன் சேர்ந்து முசம்மிலைக் கொன்றது தெரியவந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!