பேருந்தில் இளைஞர் கொன்ற விவகாரம்.. 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரண்!
திருச்சியில் வெள்ளிக்கிழமை பேருந்தில் சென்ற இளைஞரை கொன்ற வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் மணப்பாறை காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கொடியாளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் விஷ்ணு (24). வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.
திண்டுகரை அருகே பஸ் வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ்சில் ஏறி விஷ்ணுவை அடித்து கீழே தள்ளியது. அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீசார் விஷ்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோகுல் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் விஷ்ணுவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவந்தது. சமீபத்தில்தான் விஷ்ணு ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் விஷ்ணுவை குறிவைத்த கும்பல் வெள்ளிக்கிழமை பழிவாங்கும் விதமாக இந்த கொலையை செய்துள்ளது. இருப்பினும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இதனிடையே, கொலையில் கோகுல்ராஜின் சகோதரர் ஆகாஷ் (23), அவரது 17 வயது சகோதரர் மணிமாறன் (22), மற்றும் 17 வயதுடைய இருவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பழிவாங்கும் நோக்கத்தில் நடந்த இந்த கொலையில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் சரணடைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!