தொண்டையில் பேரீச்சம்பழம் சிக்கி தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் உயிரிழப்பு!

 
தெலுங்கு தேசம்

ஊட்டச்சத்து நிறைந்த பழமான பேரீச்சம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர் ஒருவர், அவசரத்தில் பழத்தை முழுவதுமாக விழுங்கியதால், அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

ஆந்திராவின் சத்யசாயி மாவட்டம் பெனுகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர் (42). இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டராக இருந்து வந்துள்ளார். இவர் வழக்கமாகப் பேரீச்சம்பழம் சாப்பிடுவது வழக்கம். சம்பவத்தன்று அவர் அவசரமாகப் பேரீச்சம்பழம் சாப்பிட்டபோது, ஒரு முழுப் பழத்தைக் கடித்து மெல்லாமல் அப்படியே விழுங்கியதாகத் தெரிகிறது. அந்தப் பழம் அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டதால், அவருக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பேரீட்சை

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கங்காதருக்குத் திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். அவசரமாகப் பேரீச்சம்பழம் சாப்பிட்டதால் ஒரு உயிரே பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!