கோயில் கும்பாபிஷேக விழா.. சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்!

வளவனூர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், இராம்பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ராம பக்தர் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (26 ஆம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இரம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்த ஹரிதரன் என்ற கல்லூரி மாணவர், கும்பாபிஷேக விழாவிற்காக சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கல்லூரி மாணவரை மீட்டு அருகிலுள்ள கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதனை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!