தாம்பரம், விழுப்புரம் மெமு ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் !
சென்னை எழும்பூர்–விழுப்புரம் ரயில் பாதையில் முக்கிய பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், தாம்பரம்–விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் இன்று (நவம்பர் 5) மற்றும் வரும் நவம்பர் 8 அன்று தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

இதன்படி, தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்கு புறப்படவுள்ள தாம்பரம்–விழுப்புரம் மெமு ரயில், ஒலக்கூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, மதியம் 1.40 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்படவுள்ள விழுப்புரம்–சென்னை கடற்கரை மெமு ரயில், ஒலக்கூரில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும். திண்டிவனம் யார்டில் நடைபெறும் முக்கியமான தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரயில் பயணிகளுக்காக தட்கல் டிக்கெட் விதிமுறைகளில் ரயில்வே புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் படிவத்தில் மொபைல் எண்ணைச் சேர்ப்பது கட்டாயமாகும். டிக்கெட் முன்பதிவு அதிகாரிகள் மொபைல் எண்ணைச் சரிபார்த்த பின் மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். போலி டிக்கெட் பிரச்சினைகளைத் தடுக்கவும், முன்பதிவு மையங்களில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடுமையான கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மிச்சப்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
