கோர விபத்து... அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 13 வாகனங்கள் மோதின. இந்த திடீர்  விபத்தில்  8 கார்கள், 4 லாரிகள், ஒரு பேருந்து ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

விபத்து

இந்த கோர விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை விபத்து குறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து  விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

 ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

 

From around the web