மீண்டும் நெல்லையில் பயங்கரம்... இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை... மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!!

நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிர்ச்சியாக அன்றைய தினமே பழிவாங்கும் விதமாக நெல்லையில் இன்னொருவர் நடுரோட்டில் வெட்டி கொலைச் செய்யப்பட்டிருந்தார். 

இந்த சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக நெல்லை அருகே இரும்பு வியாபாரி ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து வடக்கு புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி. இவருடைய மனைவி அழகு துரைச்சி. இவர்களுக்கு சேதுபதி (27), அர்ஜூனன் (25) ஆகிய 2 மகன்கள் உண்டு. சேதுபதி, கேரளாவில் கடை வைத்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஹாசினி (2) என்ற மகளும் உள்ளனர்.

மருமகனை விஷம் வைத்து கொலை செய்த மாமியார்!! பர பர வாக்குமூலம்!!

சேதுபதி கேரளாவில் தனது பெற்றோர், சகோதரருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதுபதி குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலையில் வீட்டில் இருந்த சேதுபதி பின்னர் வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிச் சென்றார்.

வடக்கு புளியம்பட்டியில் இருந்து தெற்கு அச்சம்பட்டி செல்லும் சாலையில் சேதுபதி சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மநபர்கள் திடீரென்று சேதுபதியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சேதுபதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சேதுபதியை கொலை செய்த கொலையாளிகள் யார்?, எதற்காக கொலை செய்தனர்?, முன்விரோதம் காரணமாக அவரை தீர்த்துக்கட்டினரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நெல்லை அருகே பொங்கல் விடுமுறைக்கு வந்த இரும்பு வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web