தொடரும் தீவிரவாதிகளின் தாக்குதல்?.. வர்த்தக கட்டிடத்தின் மீது விமானம் மோதி விபத்து.. இருவர் பலி!

 
 கலிபோர்னியா விபத்து

தெற்கு கலிபோர்னியாவில் வர்த்தக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர். ஃபுல்லெர்டனின் ஆரஞ்ச் கவுண்டி நகரில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள வணிக கட்டிடங்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.


இந்த விபத்தில் தையல் இயந்திரங்கள் மற்றும் ஜவுளிகள் வைத்திருந்த கிடங்கு சேதமடைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒற்றை எஞ்சின் RV-10 விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெருவில் புத்தாண்டைக் கொண்டாடும் மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக வந்த கார் மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என்பது தெரியவந்தது. டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர், இந்த தொடர் சம்பவங்களின் பின்னணியில் ஒரு தீவிர தாக்குதல் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web